×

டெல்லி நோக்கி ட்ராக்டரில் ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள் நொயிடாவில் தடுத்து நிறுத்தம்

டெல்லி: நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி ட்ராக்டரில் ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள் நொயிடாவில் தடுத்து நிறுத்தபட்டுள்ளனர். 2020-ல் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள விவசாயிகள், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் குழுக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இன்று தேசிய தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ‘கிசான் மகாபஞ்சாயத்’ மற்றும் கண்டன பேரணிக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது.

இதனை அடுத்து பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு அனைத்து எல்லைகளும் 24 மணி நேரத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து எல்லைகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. மக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி ட்ராக்டரில் ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள் நொயிடாவில் தடுத்து நிறுத்தபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கபட்டுள்ளது.

The post டெல்லி நோக்கி ட்ராக்டரில் ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள் நொயிடாவில் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Noida ,Haryana ,Punjab ,Parliament ,Union government ,Dinakaran ,
× RELATED டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட...